அந்த 44 பேரை உங்களுக்கு தெரியுமா? 1968 ம் ஆண்டு, படித்திருக்கீறீர்களா வெண்மனியை? 38 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 25ம் தேதி, இரவு 8 மணிக்கு தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மனிக்குள் நுழைந்தன போலீசு வண்டிகள். வண்டிகளிலிருந்து கட்டைகளோடும், அரிவாள்களோடும் குதித்த குண்டர்கள் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள்.இரத்தம் பீறிடுவதை கண்ட பெண்களின் ஓலத்தால் பீதியடைந்த குழைந்தைகளும் அச்சத்தால் வீறிட்டு அலறின. ஒன்றும் புரியாத ஆண்களும், பெண்களும், வயசாளிகளும் தெறித்து ஓடினார்கள். வயல்களிலும் தோப்புகளிலும் ஒளிந்து கொண்டார்கள். எங்கும் ஓட முடியாத அவர்கள் மட்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொண்டார்கள். வெளியில் நின்று கொண்டிருந்த கொலைகாரக் கும்பல் குடிசையில் தீயை கொளுத்தி போட்டது. குடிசையை தளுவிய தீ ஜீவாலை விட்டெரிந்தது. பின் மெல்ல மெல்ல தனிந்து அடங்காத கங்குகளாய் குமுறிக் கொண்டிருந்தது. வயல்களிலும் தோப்புகளிலும் ஒளிந்திருந்தவர்கள் ஊருக்கு திரும்பினார்கள். ஓப்பாரிகளாலும், நெஞ்சை பிழிந்து அழுகையை தூண்டிவிடும் அழுகைகளாலும், நெஞ்சை அறுக்கும் துயர ஓலத்தில் மூழ்கியது வெண்மனி.
ஆண்களும் பெண்களும்(கர்ப்பினிகளும்), குழந்தைகளுமாக மொத்தம் 44 உயிர்கள் துடிதுடித்து அடங்கியிருந்தன. காற்று கணத்த வெப்பத்தோடு நகர்ந்தது வானம் துக்கத்தால் கருமேகத்தை சூட்டிக் கொண்டது. தமிழகமே உறைந்தது. தொழிலாளிகள், விவசாயிகளின் வீடுகள் சாவு வீடுகளாயின. எரிந்து அனையாத வெண்மனி கங்குகள் உழைக்கும் வர்க்கத்தின் நெஞ்சில் கோபத்தீயை விதைத்தது. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தெலுங்கானா, நக்சல்பரி, பெல்ச்சியை தொடர்ந்து வெண்மனியும் தன்னை வர்க்க போரில் களத்தில் பதித்து கொண்டது.
போலீசும், நில்பிரபுக்களும் சேர்ந்துக் கொண்டு நட்த்திய இந்த கொலை வெறியாட்டத்தில் முக்கிய் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நிலப்பிரபு கோபாலகிருஷ்ணன் பத்தே நாளில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டான். மானங்கெட்ட கல்லுளி மங்கன்களான போலி கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆண்டான்களின் ஏவல்லாளன நீதி மன்றத்தை அனுகினார்கள். புரட்சியாளர்களோ கோபல்கிருஷ்ணனை உரிய இடத்திற்கு, உரிய முறையில் அனுப்பி வைத்தார்கள் வெண்மனி மடியவில்லை நக்சல்பரியாக விடிந்தது.
இன்று 38 ஆண்டுகள் ஓடி விட்டன, போலி கம்யூனிஸ்டு பொறுக்கிகளும்(ஓட்டுதான்) பிழைப்புவாத தலித்திய அமைப்புகளும் தத்தமது வழிகளில் வர்க்க போரில் சமரசமின்றி போரிட்டு மடிந்த தியாகச்சுடர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள். போலிகள் வெண்மனிச் சம்பவத்தை வெறும் கூலி உயர்வு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறார்கள். கூலி உயர்வும் பிரச்சனைதான், ஆனால் அது மட்டுமல்ல. தலிதிய அமைப்புகளோ வெண்மனியை சாதி ஒடுக்குமுறையாக மட்டுமே பார்க்கிறார்கள், சாதியும் பிரச்சனைதான், ஆனால் சாதி மட்டுமல்ல பிரச்சனை.
வர்க்கம், வர்க்கப் போராட்டம்தான் முக்கிய பிரச்சனை. விவசாயிகள் வர்க்க ரீதியாக திரண்டு சங்கமாவதையும், உரிமைகளை துணிவோடு கேட்பதையும் விரும்பாத நிலபிரபுக்களின் பயத்திலும், இன்று உரிமையை கேட்பவர்கள் நாளை உரிமையை பறிப்பார்கள் என்ற பயத்திலும், வர்க்க வெறுப்பிலும்தான் வெண்மனி சிவந்தது. நிலபிரபுக்களின் வர்க்க நலன் வெண்மனியை எரித்தது, வெண்மனி எரிக்கப்பட்டாலும் கருகவில்லை, செங்கதிராய் விளைந்தது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக புரட்சியாளர்கள் நிலபிர்புக்களை களையெடுத்தார்கள். பிறகு நிலபிரபுக்கள், முதலாளிகளின் நலனுக்காக அப்பு, பாலனிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் வர்க்க போரில் வீரமரணம் எய்தினார்கள். இது வர்க்கப் போராட்டம். பாட்டாளி வர்க்கம் ஒழிந்து போகும் வரை இந்த போர் நீடிக்கும்.
வர்க்கப் போரட்டமென்பது மேற்கண்டவாறுதான் நடக்க வேண்டுமென்றில்லை. உங்களுடைய கருத்துக்களிலும், கண்ணோட்டத்திலும் கூட தினமும் வர்க்கப் போராட்டம் நடக்கிறது. உங்களுடைய மேலதிகாரியிடம் நல்ல பெயரெடுக்க கடுமையாக் உழைப்பதும், பலன் கிட்டாமல் போகும்போது அவர் மீது வெறுப்படைவதும், பிறகு அவர் கூறும் வேலைகளை விருப்பின்றி செய்வதும் கூட கருத்தளவில் வர்க்கப்போர்தான். 'INFOSYS நாராயனமூர்த்தி' யாக தன்னை கனவு காண்பதும், கம்பெனியை நினைத்தாலே வெறுப்படைவதும், நினைக்காமலிருக்கவே விரும்புவதிலும் வர்க்கமிருக்கிறது. மொத்த ப்ரோகரம்களை அழித்ததும், டைடல் பார்க் மாடியிலிருந்து விழுந்ததும், சென்னை IQ BPO வில் நடந்ததும் கூட வர்க்கப் போராட்டங்கள்தான். எனவே ஒவ்வொரு கணமும்தான் உங்கள் வர்க்கம் பற்றி பிரங்ஞை கொள்ளுங்கள்.
வெண்மனி வெறும் கூலிப்பிரச்சனையோ, சாதிப் பிரச்சனையோ மட்டுமல்ல வர்க்கப் பிரச்சனை, வர்க்கப் போரட்டம். தீயிட்டாலும் கருக்காத வெண்மனி செங்கதிர்களின் தியாகத்திலிருந்து வர்க்க உணர்வை பெற்று ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளுவோம் வர்க்கப் போரட்டத்திற்குள், தீதான் அணைந்திருக்கிறது, கங்குகள் இன்னமும் குமுறிக் கொண்டிருக்கின்றன.
Monday, December 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment